ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் அதிரடி நடவடிக்கை!

380 0

பாரிய நட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம், தனது பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய 780 ஊழியர்களை கட்டாய ஓய்வூதிய அடிப்படையில் நீக்க நிறுவன நிர்வாகியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வழங்கப்படும் எரிபொருளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை லீற்றருக்கு 15 டொலர் அளவில் குறைக்கும்பட்சத்தில், விரைவில் நட்டத்திலிருந்து மீள முடியும் என நிறுவனத்தின் பணிப்பாளர் யோசனை தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய விமான சேவைகளின் வருடாந்த நட்டத்துடன் ஒப்பிடும் போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம் குறைவென நிர்வாகியினால் அரசாங்கத்திற்கு தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது எமிரேட்ஸ் நிறுவனத்தின் வருடாந்த நட்டம் 9.4 வீதமாகும். கேத்தே பசிபிக் விமான சேவையின் நட்டம் 9.8 வீதமாகும். கட்டார் விமான சேவை 9.8 வீத நட்டத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் ஸ்ரீலங்கனின் வருடாந்த நட்டம் 4.7 வீதமாகும். எனவே இந்த சாதாரண நட்டத்தை இலாபமாக மாற்றி கொள்வதற்கு இந்த யோசனைகள் அரசாங்கத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment