ஐ.எஸ் தீவிரவாதிகளின் சினாய் பிராந்திய தலைவரை கொன்றுவிட்டதாக, எகிப்தின் இராணுவம் அறிவித்துள்ளது.
அத்துடன் மேலும் பல தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அபு டுவா அல் அன்சாரி என்ற அவர், சினாய் மாகாணத்தில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்த அன்சார் பெயிட் அல் மக்டீஸ் என்ற குழுவுக்கு தலைவராக செயற்பட்டுள்ளார்.
சினாய் மாகாணத்தின் எல் ஆரிஸ் நகரில் உள்ள ஜிஹாத்களின் இலக்குகள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் குறைந்த பட்சம் 45 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், தீவிரவாதிகளுக்கு கடும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.