தடயப்பொருட்கள் பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பபட்டுள்ளன

409 0

download (2)மன்னார் – திருக்கேதீஸ்வரம் – மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்ட மர்மக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் அனைத்தும், பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி எம். ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

4 நாட்களாக அங்க மேற்கொள்ளப்பட்ட தோண்டல் பணிகளில், மனித எலும்பு துண்டுகள், தோடு உள்ளிட்ட 14 பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தன.

இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன்போது இந்த தடயப்பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கை முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.