புதிதாக தயாரிக்கப்படுகின்ற அரசியல் யாப்பில், இனப்பரம்பல் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
த வயர் என்ற சர்வதேச ஊடகம் இதனைத் தெரிவித்துள்ளது.
சிறுபான்மை அதிகம் வாழ்கின்ற பகுதிகளில் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலான ஏற்பாடுகள், அரசியல் யாப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதன் ஊடாகவே நல்லிணக்கத்தை நிரந்தரமாக ஏற்படுத்த முடியும் என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக சிறுபான்மை மக்கள் தங்களின் மத நம்பிக்கைகள் மற்றும் கலாசாரங்களை தடையின்றி பின்பற்றவும், பாதுகாப்பை பெறவும் வழிமுறைகள் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.