ஐ.நா அறிக்கையாளர் இலங்கை வரவுள்ளார்.

320 0

Rita-Izsák-300x198சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையில் விசேட அறிக்கையாளர் ரிடா ஐசாக் (Rita Izsák) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் இதனைத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் அவர் இலங்கையில் தங்கி இருந்து, பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கையின் சிறுபான்மையினர் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை அவர் முன்வைத்திருந்தார்.

இந்த அறிக்கை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது.

இந்தநிலையிலேயே அவரது இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.