டெங்க நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரிப்பு

258 0

நாடு முழுவதும் டெங்க நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தங்களது பணிப்புறக்கணிப்பின் காரணமாக, டெங்க நோயாளர்களுக்கான சிகிச்சைகள் பாதிக்கப்படவில்லை என்று, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, டெங்கு நுளம்புகளின் குடம்பிகளை அழிக்கும் 2 புதிய வகை நுளம்புகளை அறிமுகப்படுத்த வைத்திய பரிசோதனை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நுளம்புகள் சுற்றாடலுக்கு பாதிப்பற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இவை மலர் மற்றும் செடிகளின் சாற்றை பருகி உயிர்வாழ்வன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் நிபுணர் வைத்தியர் சாகரிகா சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment