தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கோப் சூமாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை இரகசியமாக நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் ,தற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
சூமாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளால் அவருக்கு எதிராக பல்வேறு நம்பிக்கையில்லா பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
எனினும் அவர் இதன்போது பாதுகாக்கப்பட்டார்.
எனவே இரகசியமான வாக்குப் பதிவு நடைபெற்றால் அவர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்கட்சிகள் கருதுகின்றன.
இந்த நிலையிலேயே உச்ச நீதிமன்றம் நாடப்பட்டது.