போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்த அறிக்கையை பெற்றுக் கொள்ளவும், கண்காணிப்பு கெமரா புகைப்படங்கள் மற்றும் சாட்சிகளைப் பயன்படுத்தி இதனுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயத்தில் பாரபட்சமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் பிரியந்த ஜெயக்கொடி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.