மனித உரிமை மீறல் விவகாரம் தொடர்பில் தான் செலுத்த வேண்டிய நஸ்டஈட்டை இம் மாதம் 27ம் திகதிக்கு முன்னர் கட்டி முடிப்பதாக, நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இவர் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் கிரிபத்கொடை பகுதியில் வீடொன்றின் சுவரை இடிந்த சம்பவம் தொடர்பில், அந்த வீட்டின் உரிமையாளர் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதனால் மனுதாரரது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்தது.
எனவே, முறைப்பாட்டாளருக்கு 4 இலட்சம் ரூபாவை தனது தனிப்பட்ட நிதியில் இருந்து வழங்குமாறு மேர்வின் சில்வாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், குறித்த கட்டணம் தொடர்பில் தகவலளிக்க முன்னாள் அமைச்சர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் இம் மாதம் 27ம் திகதிக்கு முன்னர் குறித்த நஸ்டஈட்டை கட்டி முடிக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டது.