சுகாதார அமைச்சுக்கு மில்லியன் கணக்கான பாதிப்பு

240 0

நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுகாதார அமைச்சுக்குள் நுழைந்து ஏற்படுத்திய குழப்ப நிலையால், அமைச்சின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களுக்கு மில்லியன் கணக்கான சேதம் ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் 4000க்கும் அதிக குழுவினர் இருந்ததாகவும், இதற்குப் பின்னால் சில அரசியல் அழுத்தம் இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மருத்துவ பீட மாணவர்கள் மட்டுமன்றி பிற மாணவர்களும் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment