அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த சங்கத்தின் மத்திய செயற் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக்கல்லூரியை தடை செய்ய கோரி நேற்று அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது காவற்துறையினரால் சுகாதார அமைச்சு வளாகத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே, வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.