முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். றக்பி விளையாட்டு வீரர் தாஜூடீன் கொலை தொடர்பான சாட்சியங்களை மறைக்க முற்பட்டதாக இவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கோட்டை மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தாஜூடின் கொலை செய்யப்பட்ட வேளை, நாரஹேன்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வந்த அழைப்புக்கள் பரிசோதிக்கப்பட்டதாக, அரச தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இவற்றில் தாஜூடீன் கொலைசெய்யப்பட்ட நாளில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சில உரையாடல்கள் நடைபெற்றதாகவும், அது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.