அசாத் சாலிக்கு எதி­ராக திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு விசா­ர­ணை

271 0

பெளத்­தர்­க­ளுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையே கல­கத்தை தூண்டும் வித­மாக
கருத்­துக்­களை வெளி­யிட்டார் எனும் குற்றச் சாட்டு தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவ­ரு­மான அசாத் சாலிக்கு எதி­ராக திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

இது தொடர்பில் கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக குமார பீ அறிக்கை
ஒன்­றினை தககல் செய்­துள்ளார்.

அதன்­படி அசாத் சாலிக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தொடர்பில், 2016 ஜூலை 2 ஆம் திகதி, அவரால் அவ­ரது வீட்டில்
நடாத்­தப்பட்­ட­தாக கூறப்­படும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு குறித்த செம்­மை­ப­டுத்­தப்பட்ட, செம்­மைப்­ப­டுத்­தப்­ப­டாத வீடியோ
காட்­சி­கள் தனியார் தொலைக்­காட்­சிகள் மூன்­றிடம் இருந்து பெற்­றுக்­கொள்ள நீதி­மன்றில் அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது.

கடந்த 2016 ஜூலை 17 ஆம் திகதி பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கு அசாத் சாலி ஊட­கங்­க­ளுக்கு அளித்­துள்ள கருத்­துக்கள் பெளத்த மதத்­தையும் அதன் தேரர்­க­ளையும் அச்­சு­றுத்தும் வண்ணம் அமைந்­துள்­ள­தாக கூறி விதா­ர­ண­லாகே துஷார சாலிய ரண­வன எனும் நபர் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

இது தொடர்பில் விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தரவால் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரி­விடம்
ஒப்­ப­டைக்­கப்பட்­டுள்ள நிலை­யி­லேயே நேற்று முன் தினம் சிறப்பு பீ அறிக்கை ஒன்­றினை தாக்கல் செய்து அசாத் சாலிக்கு எதி­ரான விசா­ர­ணைகள் தொடர்பில் சாட்­சி­களைப் பெற்­றுக்­கொள்ள அனு­மதி பெறப்­பட்­டுள்­ளது.

இந்த தேரர் கூடு­த­லாக துள்­ளினால் குண்டைக் கட்­டிக்­கொண்டு தற்­கொலை தாக்­குதல் நடத்­துவேன்’ என அசாத் சாலி
ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் குறிப்­பிட்­ட­தா­கவும் முறைப்­பாட்­டாளர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந் நிலையிலேயே இது தொடர்பில் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment