ஐ.நா இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவராக இலங்கையர் நியமனம்

258 0

ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவராக ஜயத்மா விக்ரமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரெஸ் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

2030ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி கொள்கையை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்த இளைஞர் சமூகத்தை வலுவூட்டும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜயத்மா விக்ரமநாயக்க தனது 21 வயது முதல் சர்வதேச மட்டத்திலான இளைஞர் அபிவிருத்திப் பணிகளை பிரதிநிதித்துவப்படுத்திவருகிறார்.

இவர் இலங்கை நிர்வாக சேவையின் அதிகாரியாகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment