அமெரிக்காவின் குடியரசு கட்சியில் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற செய்திகளை, ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் முக்கிய உதவியாளர் நிராகரித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்களால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க்பட்டிருந்தது.
இதனால் அவரது பிரசார பணிகள் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
எனினும் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படையில் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக, குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குடியரசு கட்சியின் முக்கிய நிதி வழங்குனர்களில் ஒருவர், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டனுக்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.