முதலமைச்சரை இழக்ககூடாது -சித்தார்த்தன்.எம்.பி

248 0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையின் காரணத்தினாலேயே நாம் முதலமைச்சரை இழக்க கூடாது என்பதில் எவ்வளவு  அதிக கவனத்தை சம்பந்தனின் சம்மதத்துடன் ஈடுபட்டோமோ அதே நிலைப்பாடுதான் சிவஞானத்தின் விடயத்திலும் கைக் கொள்ளப்படும் என்பதில் மாற்றம் இல்லை என புளட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையின் காரணத்தினாலேயே நாம் முதலமைச்சரை இழக்க கூடாது என்பதில் எவ்வளவு  அதிக கவனத்தை சம்பந்தனின் சம்மதத்துடன் ஈடுபட்டோமோ அதே நிலைப்பாடுதான் சிவஞானத்தின் விடயத்திலும் கைக்கொள்ளப்படும் என்பதில் மாற்றம் இல்லை. ஏனெனில் எவ்வாறு முதலமைச்சரை நீக்கினால் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் என ஐயம் கொண்டோமோ அதே நிலமையே இங்கும் ஏற்படும்.
அதனால் இந்த விடயத்திலும் எமது பொறுப்பும் முக்கியம் என்பதனை உணர்வோம் ஆகையினால் மிகவும் தெளிவான நிலைப்பாட்டினையே எட்டுவோம் . தவிசாளர் விடயமும் நம்பிக்கையீனத்திற்கே போக முடியாது என்பதுதான் எமது நிலைப்பாடு அதில் எந்தவிதமான மாற்று யோசணைக்கும் இடமே இல்லை. இதனால் இது தொடர்பில் ஊகங்களின் அடிப்படையிலும் குழப்பங்களின் அடிப்படையிலும் வரும் கருத்துக்கள் தொடர்பில் பெரிதாக கருத வேண்டிய தேவை கிடையாது.
இன்றைய நிலையில் மத்தியில் முன்னெடுக்கும் பணிகளிற்கு கூட்டமைப்பின் ஒற்றுமையே முக்கியம் என்பதனை மறந்து செயல்பட முடியாது. இதற்காகவுமே முதலமைச்சர் விடயத்தில் கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். இவ்வாரான நிலமையில் அதே காரணத்தைக்கூறி இன்னுமொரு குழப்பத்தினை எவரும் ஏற்படுத்த எமது கட்சி அனுமதிக்கவே மாட்டாது என்பதனை என்னால் தெளிவுபடக் கூற முடியும்.
இதற்கும் அப்பால் அவைத் தலைவரை அவைதான் தீர்மானிக்க வேண்டும். இது அடுத்த கட்டத்திற்கு செல்லவே கூடாது என்பதனில் நாம் தெளிவாக உள்ளோம் ஒருவேளை மீறி அடுத்த கட்டத்திற்குச் சென்றால் முதலமைச்சரை நீக்க முயன்றவேளை முதலமைச்சரோடு தோள் கொடுத்தோம். இங்கே அவைத் தலைவரை நீக்க முயன்றால் புளட் அவைத் தலைவருக்கே தோள் கொடுக்கும் அதனால் எந்தவிதமான ஐயமும் கொள்ளத் தேவையில்லை. என்றார்.

Leave a comment