விக்கி தவிக்கும் வடமாகாணசபை!

707 0
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக   எஸ்.தியாகேந்திரன், எஸ்.பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலர் செ.பத்மநாதன் ஆகியோர்  விசாரணைக் குழுவுக்காக முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டனர்.
நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் விவசாய துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோரை பதவி நீக்க வேண்டும் என்று  குழு பரிந்துரைத்தது.சுகாதார அமைச்சர் மருத்துவர் பா.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என குழு தெரிவித்தது.

குருகுலராஜா, ஐங்கரநேசன் தாமாக பதவி விலக வேண்டும் எனவும். சத்தியலிங்கம், டெனீஸ்வரன் ஆகிய இருவரும் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் எனவும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வடக்கு மாகாணசபை  இரண்டாக பிரிந்தது.   முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை வடமாகாணசபை உறுப்பினர் 15 பேர் அவைத்தலைவர் சீ.வீ. கே.   சிவஞானத்துடன் கூட்டுச்சேர்ந்து ஆளுநரிடம் கையளித்தனர்.

இவ் வேளை  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குழப்பம் அடைந்தார்.  ஆனால்   வடக்கு மாகாணசபை  உறுப்பினர் சிவாஜிலிங்கம்  முதலமைச்சருக்கு அருகில் இருந்து துரிதமாக முதலமைச்சருக்கு ஆதரவாக  மாகாணசபை உறுப்பினர்கள் இணைந்து கையொப்பம் இட்டு உரிய நேரத்தில் ஆளுநரிடம் ஒப்படைத்தார்.

முதமைச்சர் மீதான  நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களிடையே  கோபத் தணல் ஒன்றை ஏற்படுத்தியது. அடக்குமுறைக்குள் அடிவாங்கிய   இனம்   கோபத் தணலுடன் குமுறிக்கொண்டிருந்தது.

இவ்வேளை  தமிழ்தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்   மிகவிரைவாக  மக்களின் போபத் தணல் மீது இருந்த சாம்பலை மிக துல்லியமான  நேரத்தில் ஊதீ விட்டார். இதன் விளைவாக   இளைஞர்கள்  வடக்குமாகாணசபையின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே வேளை பேரவையைக் கூட்டி அவசர முடிவுகளை எடுத்தார். அதன் பிரகாரம் முதலமைச்சரின் வாசல்தலம் நோக்கி மக்கள் அலைஅலையாக குவிந்து தம் ஆதரவை தெரிவித்தனர். அவ் வேளை முதலமைச்சர் விக்கி  மக்களின் அன்பு நிறைந்த ஆதரவை கண்டு விக்கித்துப் போனார்.

முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித் இரண்டு அமைச்சர்களும் பதவி விலகல் கடிதத்தை கையளித்து விட்டனர். மற்றை இருவரும் சமரச முயற்சியின் பின் தொடர்ந்து பணியாற்றவுள்ளனர்.

இவ் வேளை  சம்பந்தனின்  சாணக்கியம், மாவையின் வரட்டுக் கௌரவம், சுமந்திரனின் ஏக போகம், சிவஞானத்தின் நரித்தனம், சயந்தனின் சறுக்கல், மைத்திரின் புத்திசாதுரியம், மக்களின்  தமிழ் தேசியப்பற்று  இவற்றைப் பாத்து விக்கி விக்கித்துப்போய் நிற்கிறார்.

முதலமைச்சர் என்ற பதவிக்குள்  விக்கினேஸ்வரன்  முடங்கிப்  கோகாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவது போல விக்கினேஸ்வரன் தமிழினத்திற்கே தலைமை தாங்க  தன்னை தயார்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அவா.

Leave a comment