நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41). இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் ஏற்பட்டு பின்னர் தன் காதலியை நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளார் பீட்டர்.
உடனே இந்த தகவலை ஜாங்கிற்கு தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் ஜாங்க் அவர் கூறுவதை நம்பவில்லை. ஆனால் அலெக்ஸ்சாண்டர் 4500 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பறந்து சீனா வந்துவிட்டார். விமான நிலையத்தில் இருந்தபடியே காதலியை தொடர்புக்கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரை எந்த வகையிலும் தொடர்புக்கொள்ள முடியவில்லை. இதனிடையே பத்து நாட்கள் காத்திருந்தும் காதலி வராததால் பீட்டரின் உடல் நிலை மோசமானது.
பின்னர் அங்கு இருந்த விமான நிலைய ஊழியர்கள் பீட்டரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொலைக்காட்சி மூலமாக அலெக்ஸ்சாண்டர் சீனாவில் இருப்பதை ஜாங் தெரிந்துக்கொண்டுள்ளார். ஆனால், இதுவரை இருவரும் சந்தித்துக்கொண்டதாக தெரியவில்லை.