அதிசொகுசு வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் உந்துருளிகளில் செல்லும்போதும் மற்றும் நடந்து செல்லும்போதும் வீதிகளில் குப்பைகளை இட்டுச் செல்வோர் தொடர்பாக கண்காணிப்புகள் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் குப்பைகளை வகைப்படுத்தாமல் வீதிகளில் இட்டுச் செல்வதாகவும், அவர்கள் குறித்து புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தம்மிடம் உள்ளதாக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வீ. கே. அநுர தெரிவித்துள்ளார்.
சிலர் பணத்துக்காக முச்சக்கர வண்டிகளில் குப்பைகளை சேகரித்துக்கொண்டுவந்து வீதிகளில் வீசிச் செல்கின்றனர்.
இதையடுத்து, குறித்த இடத்தில் பலரும் குப்பைகளை இட்டுச் செல்கின்றனர.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் குறித்து இராணுவத்தினர், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஊடாக கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதனூடாக அவர்கள் குறித்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு குப்பைகளை வீதிகளில் இட்டுச் சென்ற 17 பேர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்