இலங்கையில் தடுப்பில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு மீண்டும் வலியுறுத்திய தமிழக முதல்வர்

372 0
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 தமிழக கடற்தொழிலார்களையும், 136 படகுகளையும் தாமதமின்றி விடுவிக்க வெளிவிவகார அமைச்சு நேரடியாக தலையிட்டு உடனடி நடடிவக்கை எடுக்கவேண்டும் என இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இதனை வலியுறுத்தியுள்ளதாக இந்திய இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதை அடுத்து அவர் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழக கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ச்சியாக இடம்பெறுவதாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ள தமிழக முதலமைச்சர், இதனைத் தடுக்க வலுவான இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment