யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று காலை 8.30 முதல் மாலை 6.00 மணிவரை மின்சார விநியோகத் தடை ஏற்படுத்தப்படவுள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தின், மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, கொடுக்குழாய், ஆழியவழை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வெற்றிலைக்கேணி இராணுவ முகாம், மற்றும் கட்டைக்காடு இராணுவ முகாம் பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்படவுள்ளது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமாதநகர், விஜி வீதி ஆகிய பகுதிகளிலும், வவுனியா மாவட்டத்தின் தேக்கவத்தை பிரதேசத்திலும் மின்சார விநியோகத்தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.