இருபது லட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப் பொருளுடன் கொழும்பில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹிங்குருகடை சந்திப் பகுதியில் குறித்த போதைப்பொருளை உந்துருளியில் கொண்டுசென்றபோதே அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய, கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.