வடக்கு மாகாண முதலமைச்சரால் கட்டாய விடுமுறையில் செல்லப் பணிக்கப்பட்ட இரு அமைச்சர்களும், தம்மீதான விசாரணையை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க சம்மதித்துள்ளதாக, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்;துள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் சற்றுமுன் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சரால் கட்டாய விடுமுறையில் செல்லப் பணிக்கப்பட்ட இரு அமைச்சர்களும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் குருமுதல்வர்களுடனும் தாம் பேசியுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.