முதலமைச்சரை, நல்லை ஆதீனக் குருமுதல்வரும், யாழ் மறைமாவட்ட ஆயரும் இன்று சந்தித்துள்ளனர்(காணொளி)

664 27

வடக்கு மாகாண முதலமைச்சரை, நல்லை ஆதீனக் குருமுதல்வரும், யாழ் மறைமாவட்ட ஆயரும் இன்று சந்தித்துள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை, நல்லை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், வடக்கு மாகாண சபையில் நிலவும் குழப்ப நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a comment