வவுனியாவில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கத்திற்கு ஆதரவாக இன்று காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது, திடீரென அங்கு வந்த சிலருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.