வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டநம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தொலைபேசிமூலம் அறிவிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சருக்குத் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சரால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எழுதிய பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இரண்டு அமைச்சர்கள் மீதும் நடாத்தப்படும் விசாரணைக்கு எந்த இடையூறும் விளைவிக்கக்கூடாது என தான் அவர்களிடம் வலியுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கடிதம் வருமாறு,