டிரம்ப்புக்கு எதிரான வழக்கை கைவிட நீதிமன்றம் மறுப்பு

382 0

201608040539339588_Court-refuses-to-drop-the-case-against-Donald-Trump_SECVPFஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு சொந்தமாக பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் நடத்திய ரியல்-எஸ்டேட் கருத்தரங்கு மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகவும், இதற்காக 35 ஆயிரம் டாலர் செலுத்தியதாகவும் மாணவர்கள் சிலர் டிரம்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு மாவட்ட கோர்ட்டில் கடந்த 2013-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு டிரம்ப் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஆஜரான டிரம்ப்பின் வக்கீல்கள், மாணவர்களை ஏமாற்றும் நோக்கம் டிரம்ப்புக்கு இல்லை என வாதிட்டனர். ஆனால் மாணவர்களை ஏமாற்றிய திட்டத்தில் டிரம்ப்பின் பங்களிப்பு இருப்பதாக கூறி அந்த வழக்கை கைவிட நீதிபதி கன்சலோ குரியேல் மறுத்து விட்டார். இது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப்புக்கு பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதற்கிடையே குடியரசு கட்சியை சேர்ந்த முன்னணி தலைவர்களில் ஒருவரும், டிரம்ப்பின் பிரசாரத்துக்கான நிதி சேகரிப்பாளருமான மெக் விட்மான், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை ஆதரிக்கப்போவதாக அறிவித்து உள்ளார். டிரம்ப் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறிய அவர், டிரம்ப் ஒரு சர்வாதிகாரி எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.