நம்பிக்கையில்லா தீர்மானத்தை கைவிடுவதாக தமிழரசுக்கட்சி தெரிவிப்பு!

448 0

தமிழரசுக்கட்சியால் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் ஆளுநருடன் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக்கொள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சற்று நேரத்திற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

அத்தோடு இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணைகள் முழுமையாக நடைபெறுவதுடன் விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் மீதான விசாரணைகளும் மீளாய்வு செய்யப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவருவதானால் அதனை அவைத்தலைவரிடமே ஒப்படைக்கவேண்டும். ஆனால் இங்கு அவைத்தலைவர் இருந்தவர்களை கூட்டிக்கொண்டு ஆளுநர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். எனினும் சபைக்கு பொதுவானவராக செயற்படவேண்டிய அவைத்தலைவர் சட்டவிரோதமாக செயற்பட்டுள்ளமையால் அவரை மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment