திருகோணமலையில், 27வது தியாகிகள் தினம் இன்று நினைவுகூரப்பட்டது(காணொளி)

457 0

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணி கட்சியினால் 27வது தியாகிகள் தினம் இன்றையதினம் காலை 9.00 மணியளவில் திருகோணமலை கடல் முக வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நினைவுகூரப்பட்டது.

கட்சியின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சத்யன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பொதுமக்களுக்கான இலவசகண் பரிசோதனையும் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திரு.கோணேஸ்வரன், முன்னாள் திருகோணமலை நகரசபை உறுப்பினர் திரு.நந்தன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment