லஞ்ச , ஊழல் , நிதிக்குற்றச்சாட்டில் ஈடுபட்டேன் என யாரேனும் கூறினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன். விசாரணைக்குழுவுக்கு எதிராகவும் நீதிமன்றை நாடவுள்ளதாக தெரிவித்தார்.
முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.இன்றைய தினம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.என்னை அமைச்சு பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விசாரணைக்குழு திட்டமிட்டு என் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது என தெரிவித்த ஐங்கரநேசன் முதலமைச்சரை பலவீனப்படுத்த வேண்டுமாயின் அவரின் வலது கையை துண்டித்தால் அவரை தனிமைப்படுத்தலாம் என நினைத்து மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் சிலர் இங்கே செயற்படுத்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.