பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை தாம் ஒளித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமைய கட்சியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஸவின் குழுவினர் தமக்கு எதிராக ஊடகங்கள் மூலம் சேறு பூச முற்படுகின்றனர்.
எந்தவகையிலாவது ஞானசார தேரரை பயன்படுத்தி ஜாதிக ஹெல உறுமையவை வீழ்த்த மகிந்த ராஜபக்ஸ முயற்சி செய்கிறார் எனவும் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.