கொழும்பு நகரில் தேங்கி கிடக்கும் குப்பைகளை 3 நாட்களுக்குள் அகற்றுமாறு எச்சரிக்கை

313 0
கொழும்பு நகரில் தேங்கி கிடக்கும் குப்பைகளை 3 நாட்களுக்குள் அகற்றுமாறும் இல்லையேல் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி ஜனாதிபதியின் உத்தியோகப் பூர்வ இல்லத்திற்கு முதலமைச்சரை அழைத்த ஜனாதிபதி இது தொடர்பில் எச்சரித்துள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் டெங்கு ஒழிப்பு குறித்து கடந்த தினம் அவசர கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய கலந்துக்கொள்ளவில்லை.
இந்தநிலையிலேயே,  ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Leave a comment