தம்புள்ளையில் கோர விபத்து! இரண்டு இளைஞர்கள் பலி!

330 0

தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியின் திகம்பதஹா – ஹவுடன்கொடை பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் பயணித்த உந்துருளி பாரவூர்தியொன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் மாத்தளை மற்றும் தம்புள்ளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

Leave a comment