கீதாவின் மனுவை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு நியமனம்

327 0

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரியசாத் தலைமையில் இந்த குழு குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர்.

இதன்படி கீதாவின் மனு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள கீதா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என நீதிபதி அறிவித்ததுடன், நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் பங்கேற்க அவருக்காக செலவு செய்யப்பட்ட தொகையை மீள அறவிடவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக கீதா குமாரசிங்க மேன் முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

குறித்த மனுவை விசாரிப்பதற்காகவே இந்த ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment