பொலிஸ் சீருடை, கைவிலங்கு உள்ளிட்ட பல பொருட்களுடன் இருவர் கைது

18710 36

பொலிஸ் சீருடை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான கை விலங்குகளுடன் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முல்லேரியா பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டியில் இருந்து போலி வாகன இலக்கத் தகடு, காப்புறுதி பத்திரம் மற்றும் பொலிஸ் சீருடை, சிறைச்சாலை அதிகாரிகளின் தலைக்கவசங்கள் இரண்டு, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான கைவிலங்குகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவே​ளை, சந்தேகநபர்கள் அங்கோடை பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதான இருவராகும்.

இவர்களை இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதோடு, முல்லேரியா பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment