விமலுக்கு எதிரான வழக்கு: சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைப்பு

394 0

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமையால் 9 கோடி ரூபாவுக்கும் அதிக நஸ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த விடயம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, அடுத்த கட்ட வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் 23ம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதவான் தீர்மானித்துள்ளார்.

அன்றையதினம் சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை தொடர்பாக சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment