சம்பந்தன் பொறுப்பேற்றால் முடிவை மாற்ற வாய்ப்பு

383 0

வட மாகாண சபை உறுப்பினர்களான பி.டெனிஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பொறுப்பேற்பாராயின், தனது முடிவை மறுபரிசீலணை செய்ய முடியும் என, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத வட மாகாண சபை அமைச்சர்களான பி.டெனிஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பான முடிவை சரி செய்யுமாறு வடக்கு முதல்வருக்கு கூட்டமைப்பின் தலைவரால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

இதற்கமைய, குறித்த இருவர் தொடர்பிலும் சம்பந்தன் பொறுப்பேற்பாராயின், தான் வௌியிட்ட கருத்தை மீண்டும் மாற்றிக் கொள்ளத் தயார் என, வடக்கு முதல்வர் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து இந்தப் பிரச்சினை குறித்து நான்கு கடிதங்கள் வரை பரிமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கமைய, சம்பந்தனுக்கு தான் அனுப்பியுள்ள 4வது கடிதத்திலேயே வடக்கு முதல்வர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பி.டெனிஸ்வரன் மற்றும் பி.சத்தியலிங்கம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகள் மீது, அரசியல் அழுத்தங்கள் எதுவும் இருக்கக் கூடாது எனவும் அவர் இதன்போது எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரியுள்ளார்.

Leave a comment