டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான குழுவொன்றை ஆரம்பிப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடளாவிய ரீதியாக பரவிச் செல்லும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணமளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.