ஐம்பத்து நான்கு லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பொரளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகத்திற்குரியவரிடம் இருந்து 539 கிராம் மற்றும் 900 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.