பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்று பெரும்பான்மை இடத்தை பிடித்தது.
பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்று பெரும்பான்மை இடத்தை பிடித்தது.
சமீபத்தில் நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 39 வயதே ஆன இமானுவேல் மெக்ரான் வெற்றி பெற்று அதிபரானார். அவர் செஞ்சுறிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சியை தொடங்கி ஓராண்டுக்குள் வெற்றி வாகை சூடினார்.
அதிபர் தேர்தல் முடிந்ததையொட்டி கடந்த 11-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரான்ஸ் பாராளுமன்றத்தின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 577 ஆகும். அவற்றுக்கு நடந்த வாக்குப்பதிவில் பெரும்பான்மையான இடங்களில் அதிபர் மெக்ரானின் செஞ்சுறிஸ் கட்சி வெற்றி பெற்றது.
பிரான்சை பொறுத்த வரை எம்.பி., தேர்தலில் போட்டியிடுபவர்கள் 50 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும். இதற்காக 2 கட்டமாக தேர்தல் நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் 50 சதவீத ஓட்டு கிடைக்காவிடில் குறைந்த ஓட்டுகள் பெற்றவர்கள் நீக்கப்பட்டு முன்னணியில் இருப்பவர்கள் மீண்டும் போட்டியிடுவார்கள். அவர்களில் 80 சதவீதம் வாக்குகள் பெறுபவர்கள் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
முதல் சுற்று தேர்தலை வைத்து எத்தனை எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். என கணிக்க முடியாது. எனவே இன்று 2-வது சுற்று தேர்தல் நடந்தது. அதில் ஏற்கனவே நடந்த தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற்றவர்கள் மட்டும் போட்டியிட்டனர்.
அதற்காக பிரான்ஸ் முழுவதும் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக ஓட்டு போட்டனர். வாக்கு பதிவு முடிந்ததும் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதில், அதிபர் மேக்ரானின் செஞ்சுறிஸ்ட் கட்சி மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 355-ல் இருந்து 425 இடங்கள் வரை கைப்பற்றியது. பாராளுமன்ற தேர்தலில் அதிபரின் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், மேக்ரான் முன்வைத்த புதிய பொருளாதார திட்டங்கள், பிரிட்டனுடனான உறவு குறித்த கொள்கைகள் பாராளுமன்றத்தில் பெரிய எதிர்ப்பின்றி நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.