விக்னேஸ்வரன் எந்த பக்கமும் சார்ந்து நிற்பது நல்லதல்ல – வி.அனந்தசங்கரி

410 0

தற்போதைய நிலையில் எந்த பக்கமும் விக்னேஸ்வரன் சார்ந்து நிற்பது நல்ல விடயமல்லவென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.அனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்பே தமிழரசுக் கட்சியினை தந்தை செல்வா மூடிவைத்துவிட்டார்.

2004ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜா அதற்கு உயிர் கொடுத்தார்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயாராக இருந்தனர்.

இதன்போது இரா.சம்பந்தன்;, மாவை சேனாதிராஜா ஆகியோர் சேர்ந்து குழப்பியடித்து தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டனர்.

அன்று ஒற்றுமையாக தேர்தலில் போட்யிட்டிருந்தால் தமிழர்கள் அனைவரும் ஒரேகட்சியில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்பர்.

தமிழர்கள் பலமடைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.

யுத்தம் முடிவடைந்து, தமிழர்கள் எந்தவித அழிவையும் சந்தித்திருக்க மாட்டார்கள்.

சேனாதிராஜாவும், சம்பந்தனும் செயற்பாடுகளே இந்த அழிவு ஏற்பட்டது.

இதற்கு அவர்களே பொறுப்பு கூற வேண்டும் என ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு, தானே வரவேண்டும் என்ற போக்கே இன்று வடக்கு மாகாண சபை குழப்பம் தோன்றுவதற்கும் காரணமாகும்.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருப்பதில் சேனாதிராஜாவுக்கு விருப்பம் இல்லை.

தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தயாராக இருந்த வேளையில் அதனை நிறுத்தி அவர் முதலமைச்சராகி விட்டார் என்ற கோபமே இதற்கு காரணம்.

முதலமைச்சருக்கு தற்பொழுது இதைவிட வேறு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

சித்தார்த்தன், அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் அவரிடம் சென்று ஒற்றுமை கொண்டாடுகின்றனர்.

விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் மிகவும் நிதானமாகவும் பொதுவாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

இதன் பின்னர், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது ஆரோக்கியமானதல்ல.

அவ்வாறு சென்றால் பதவி ஆசைக்காக சென்று விட்டார் என்ற பெயரை சுமக்க வேண்டும்.

எனவே விக்னேஸ்வரன் பொதுவாக இருந்து கொண்டு, தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி ஒற்றுமையாக செயற்படவருமாறு பகிரங்க அழைப்பு விடுக்க வேண்டும்.

இதுவே ஆரோக்கியமாக இருக்கும்.

இதனை தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி அவர் மேற்கொள்ள வேண்டும் என ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment