யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை மீட்டுத் தருவதாக கூறி கப்பம் பெற்றதாக கூறப்படும் ஒருவரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
யாழ்ப்பாண சிரேஸ்ட காவல்துறை அதிகாரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த சந்தேகத்திற்குரியவர் 2006ஆம் ஆண்டில் காணாமல் போன ஒருவரை மீட்டுத் தருவதாக கூறி, அவரின் சகேதரரிடம் இருந்து கப்பம் பெற்றதாக கோப்பாய் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பல வருடங்களுக்கு பின்னர் அவரை நேற்று முன்தினம், காணாமல் போனவரின் உறவினர்கள் பிடித்து யாழ்;ப்பாண காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து முறைப்பாடு உள்ள கோப்பாய் காவல்துறை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அவர் சந்தேகத்திற்கிடமான திரவம் ஒன்றை உட்கொண்டுள்ளார்.
பின்னர் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணமடைந்தார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
இன்று சர்வதேச மகளிர் தினம்!
March 8, 2025 -
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
கைபேசிச் சாட்சி!
April 6, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
அன்னை பூபதி நாட்டுப்பற்றாளர் தினம் 3.5.2025 போகும், யேர்மனி
April 27, 2025 -
வீரவணக்க நிகழ்வு 31.5.2025
April 27, 2025