நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் பொழுது உறுப்பினர்கள் யாரேனும் செங்கோலை தொட முனைந்தால், அவர்களுக்கு 8 வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
சபை அமர்வுகளின் போது செங்கோலை தொடுதல் அல்லது ஒழுக்கத்தை மீறும் வகையில் உறுப்பினர் ஒருவர் செயற்படுவராயின், அது அவரது முதலாவது சந்தர்ப்பம் என்றாலும் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட புதிய உத்தேச நிலையியல் கட்டளையின் இறுதிச்சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்ந்தும் சபை அமர்வுகளின் போது அநாகரீகமாக நடந்துக்கொள்வதன் மூலம் நிலையியற் கட்டளைச் சட்டத்தினை மீறுவாராயின், நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பினை உடன் இடைநிறுத்த சபாநாயகருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.