வனுவாட்டின் (Vanuatu) ஜனாதிபதி பல்ட்வின் லோன்ஸ்டேல் (Baldwin Lonsdale) தமது 67வது வயதில் மாரடைப்பினால் இன்று அதிகாலை மரணமானார்.
அங்கலிக்கன் பாதிரியாரான் இவர் கடந்த 2014 செப்டம்பர் மாதம் முதல் ஜனாதிபதியாக பதவி வகித்தார் என ‘வனுவாட்டு டெயிலி போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இவர் மக்களினால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பதுடன், மக்களின் மதிப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க தமது பங்களிப்பினை பெரிதும் வழங்கி வந்தார் என அவுஸ்திரேலிய ஆளுனர் நாயகம் பீட்டர் கொஸ்குரோவ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 75 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.
அந்த காலகட்டத்தில் மறைந்த ஜனாதிபதி பாதிக்கப்பட்ட பிரதேச மக்களின் நலன்களை பேண அர்ப்பணிப்புடன் செயல்பட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.