தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் இரு முனை­களில் கூர்மை அடைந்­துள்­ளது!

582 0

வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யா­னது, தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் இரு முனை­களில் மிக மோச­மாகக் கூர்மை அடைந்­துள்­ளதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. மரபு வழி­யாகப் பேணப்­பட்டு வந்த அர­சியல் தலை­மைக்கு ஏற்­பட்­டுள்ள மிக மோச­மான சோத­னை­யாகக் கூட இந்த நெருக்­க­டியை நோக்­கலாம்.

தமிழ் மக்­க­ளின் ­அ­ர­சியல் தலை­மையை முழு அளவில் ஏற்றுச் செயற்­பட்­டி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் வீழ்ச்­சியின் பின்னர், தமிழ் மக்­களின் அர­சியல் தலைமை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தோள்­களில் வந்­தி­றங்­கி­யது. விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் பாரா­ளு­மன்ற அர­சியல் தலை­மை­யாக – ஓர் அர­சியல் அலங்­கார நிலை­யி­லேயே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புச் செயற்­பட்டு வந்­தது. தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் விட­யங்­களில் தீர்­மானம் எடுக்­கின்ற வல்­லமை பெற்ற ஓர் அர­சியல் சக்­தி­யாக அந்த நேரம் அது பரி­ண­மித்­தி­ருக்­க­வில்லை.

இரா­ணுவ வழியில் அர­சியல் செல்­வாக்கு பெற்­றி­ருந்த கார­ணத்­தினால், இரா­ணுவ ரீதி­யாக சக்தி மிக்­க­வர்­க­ளாகத் திகழ்ந்த விடு­த­லைப்­பு­லி­களே அப்­போது தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் செல்­நெறிப் போக்கைத் தீர்­மா­னிப்­ப­வர்­க­ளாகத் திகழ்ந்­தார்கள். அர­சியல் தீர்வு விட­யத்தில் அர­சுக்கு அவர்­களே இரா­ணுவ ரீதி­யாக அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள். அர­சியல் ரீதி­யாக, பாராளு­மன்­றத்தின் ஊடாக அத்­த­கைய அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்­கின்ற ஒரு சூழல் அந்த நேரத்தில் காணப்­ப­ட­வில்லை என்­பது இதற்கு முக்­கிய கார­ண­மாகும்.

கிட்­டத்­தட்ட ஒரு நிழல் அர­சியல் சக்­தி­யாகத் திகழ்ந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பே, விடு­த­லைப்­பு­லி­களின் பின்னர், தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் விட­யங்­களிலும் – அர­சியல் விவ­கா­ரங்­களிலும் தீர்­மா­னங்­களை மேற்­கொள்­கின்ற ஒரு சக்­தி­யாகப் பரி­ண­மித்­தி­ருந்­தது. விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் பாராளு­மன்ற அர­சி­யலில் மக்கள் எவ்­வாறு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை ஆத­ரித்­தி­ருந்­த­னரோ, அதே போக்கு விடு­த­லைப்­பு­லி­களின் பின்­னரும் தொடர்ந்­தது. அந்த வகை­யி­லேயே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மையை கடந்த எட்டு வரு­டங்­க­ளாகப் பேணி வந்­துள்­ளது.

இருப்­பினும் இந்த காலப்­ப­கு­தியில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை ஓர் இறுக்­க­மான அர­சியல் சக்­தி­யாகக் கட்­ட­மைத்து வளர்ப்­ப­தற்கு அதன் தலைமை தவ­றி­யி­ருந்­தது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை அதி­கா­ர­பூர்­வ­மான ஓர் அர­சியல் கட்­சி­யாக மாற்­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களையும் வழி­மு­றை­களையும் கூட்­ட­மைப்பின் தலைமை மேற்­கொள்­ள­வில்லை. மாறாக, கூட்­ட­மைப்பின் தலைமைப் பொறுப்பில் செல்­வாக்கு பெற்­றி­ருக்­கின்ற தமி­ழ­ர­சுக்­கட்சி, கட்சி அர­சியல் நலன்­களைப் பேணு­வ­திலும், அந்தக் கட்­சியை மக்கள் மத்­தியில் முன்­னோக்கி வளர்த்துச் செல்­வ­தி­லுமே கவனம் செலுத்தி வந்­தது. அதற்­கான அர­சியல் வியூ­கங்­களை வகுத்துச் செயற்­ப­டுத்­து­வதில் அது தீவிர கவனம் செலுத்தி வந்­தது. இதன் கார­ண­மா­கவே, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பை, ஓர் அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையைப் புறந்­தள்ளி, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தேர்தல் வழி­மு­றை­களில் தன்­னி­க­ரற்ற ஒரு தன்­மையில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியை அது தொடர்ந்து முதன்­மைப்­ப­டுத்தி வந்­துள்­ளது.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு என்­பது தமிழ் மக்­களின் அர­சியல் அடை­யா­ள­மாகத் திகழ்­கின்­ற­தே­யொ­ழிய, அதன் அர­சியல் குறி­யீட்­டுக்­கு­ரிய தேர்தல் சின்­ன­மாக, தமி­ழ­ரசுக் கட்­சியின் வீட்­டுச்­சின்­னமே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்­கென தனி­யான கொடி­கூட கிடை­யாது. அதுவும் தமி­ழ­ரசுக் கட்­சியின் கொடி அடை­யா­ளத்­தையே கொண்­டி­ருக்­கின்­றது.

இத்­த­கைய ஒரு நிலை­யில்தான் வட­மா­கா­ண­ச­பைக்­கான தேர்­தலில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆளும் கட்­சி­யாக அமோக வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது. அதன் முத­ல­மைச்­ச­ராக பணி ஓய்வு பெற்ற நீதி­ய­ரசர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அர­சி­ய­லுக்குள் அழைத்து வந்து புகுத்­தி­யி­ருந்தார்.

வட­மா­காண சபைக்­கான தேர்­தலில் வேட்­பா­ள­ராக அவர் நிய­மிக்­கப்­பட்­ட­போது, வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ரா­கவே அவர் உரு­வ­கப்­ப­டுத்­தி­யி­ருந்தார். அந்த அடிப்­ப­டை­யி­லேயே அவ­ருக்கு மக்கள் பெரும்­பான்­மை­யாக வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். அவ்­வாறு முத­ல­மைச்­ச­ராக்­கப்­பட்ட விக்கி­னேஸ்­வ­ர­னையே இப்­போது தமி­ழ­ரசுக் கட்சி தனக்கு நம்­பிக்­கை­யில்­லா­தவர் என சுட்­டிக்­காட்டி வட­மா­காண ஆளு­ந­ரிடம் எழுத்து மூல­மாகத் தெரி­வித்­துள்­ளது.

புதிய அர­சியல் அரங்கு, புதிய அர­சியல் அனு­பவம்

வட­மா­காண சபை என்­பது தமிழ் மக்­க­ளுக்குப் புதி­யதோர் அர­சியல் அரங்­காகும். வட­மா­கா­ணத்­திற்­கென ஒரு மாகாண சபை முன்னர் இருந்­த­தில்லை. ஏற்­க­னவே திட்­ட­மிட்­டி­ருந்­த­வாறு, சிங்­கள அர­சியல் பேரி­ன­வாத சக்­திகள், இணைந்­தி­ருந்த வடக்­கையும் கிழக்­கையும் அர­சியல் தந்­தி­ரோ­பாய ரீதியில் இரண்­டாகப் பிரித்து, முடி­வுக்குக்கொண்டு வந்­ததன் பின்னர், முதலில் கிழக்கு மாகாண சபை­யையும், தொடர்ந்து வட­மா­காண சபை­யையும் தனித்­த­னியே தேர்­தல்­களின் மூலம் செயற்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

இந்த வகையில் கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்கள் செல்­வாக்கு செலுத்­தத்­தக்க ஓர் அர­சியல் சக்­தி­யாகப் பரி­ண­மிக்க முடி­யாமல் போனது. அங்கு இனப்­ப­ரம்­பலில் திட்­ட­மிட்டு ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த தீவி­ர­மான மாற்­றங்­களே இதற்கு முக்­கிய கார­ண­மா­கி­ன. ஆனால் வடக்கு மாகா­ணத்தில் முதன் முறை­யாக, வட­மா­காண சபைத் தேர்தல் நடத்­தப்­பட்­ட­போது, அத்­த­கைய நிலைமை காணப்­ப­ட­வில்லை. அதனால், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு அங்கு அமோ­க­ வெற்­றியை ஈட்டக் கூடி­ய­தாக இருந்­தது. ஆனால் இந்த நிலைமை அடுத்த தேர்­தலில் தொட­ரு­மா என்­பது சந்­தே­கத்­திற்குரி­ய­தாக மாறி வரு­கின்­றது.

தமி­ழர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட வட­மா­கா­ணத்தின் இனப்­ப­ரம்­பலை மிக நுட்­ப­மான அர­சியல் நோக்­குடன் நன்கு திட்­ட­மிட்ட வகையில் பேரி­ன­வாத அர­சியல் சக்­திகள் மாற்றி வரு­கின்­றன. இதன் கார­ண­மாக வரப்­போ­கின்ற தேர்­தல்­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்போ அல்­லது அது சார்ந்த அர­சியல் கட்­சி­களோ கடந்த காலங்­களைப் போல அமோக வெற்­றியை ஈட்ட முடி­யாத ஒரு நிலைமை உரு­வாகி வரு­கின்­றது.

இது ஒரு புற­மி­ருக்க, வட­மா­காண சபை என்ற புதிய அர­சியல் அரங்கில், அர­சியல் நிர்­வா­கத்­திற்கு முற்­றிலும் புதி­ய­வர்­களே, பிர­தி நிதி­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்­டனர். அதே­போன்று அர­சி­ய­லுக்குப் புதி­ய­வ­ரா­கிய முன்னாள் நீதி­ய­ர­ச­ரா­கிய சி.வி.விக்கி­னேஸ்­வ­ரனும் முத­ல­மைச்சர் பொறுப்­புக்குக் கொண்டு வரப்­பட்­டி­ருந்தார்.

தனி­நாடு கோரி, சாத்­வீக வழி­க­ளிலும், பின்னர் ஆயுத ரீதி­யா­கவும் போராடி வந்த தமிழ் மக்­க­ளுக்­கான முத­லா­வது தமிழ் அர­சாங்­க­மாக வட­மா­காண சபை என்ற மாகாண அரசே வந்து வாய்த்­தி­ருந்­தது. இது ஒரு பொன்­னான சந்­தர்ப்பம். தனி­நாட்­டுக்­காக ஏங்­கிய மக்­க­ளுக்கு கிடைத்த ஓர் அர­சியல் வரப்­பி­ர­சாதம். அதனைக் கண்­ணென போற்றி முடிந்த அளவில் சிறப்­பாகச் செயற்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். அந்த அர­சியல் பொறுப்பு வட­மா­காண சபையின் ஆளும் தரப்­பா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையே சார்ந்­தி­ருந்­தது.

வட­மா­காண சபையின் ஆட்சிப் பொறுப்பை நேர­டி­யாக ஏற்­றி­ருக்­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு உறுப்­பினர்கள் அனை­வ­ருக்கும் இந்த பொறுப்பு உரி­ய­தாகும். இது ஆட்சிச் செயற்­பா­டு­களில் நேர­டி­யாக ஈடு­பட்­டுள்ள சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு மட்டும் உரி­ய­தென்று வரை­ய­றுத்­து­விட முடி­யாது. இந்த கூட்டுப் பொறுப்பில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பும் மிகவும் காத்­தி­ர­மான பொறுப்பைக் கொண்­டி­ருக்­கின்­றது. ஏனெனில் வட­மா­காண சபையின் செயற்­பா­டுகள் – சிறப்­பா­னதோ அல்­லது மோச­மா­னதோ – எது­வாக இருந்­தாலும், ஒட்­டு­மொத்த பொறுப்பும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையே சார்ந்­த­தாகும்.

பாரிய பொறுப்பு

வட­மா­காண சபையின் சுதந்­தி­ர­மான செயற்­பா­டு­க­ளுக்கு வழி­யேற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருந்த அதே­வேளை, அதன் நிர்­வா­கத்தை சிறப்­பாக முன்­னோக்கிக் கொண்டு செல்­வ­தற்­கு­ரிய வழி­காட்­டல்­களை கூட்­ட­மைப்பு முத­ல­மைச்­ச­ருக்கும், சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் உரிய வழி­மு­றை­களின் ஊடாக வழங்­கி­யி­ருக்க வேண்டும்.

வட­மா­காண சபை என்­பது மாகாண நிர்­வா­கத்­திற்கும், மாகாண மட்­டத்­தி­லான அர­சி­ய­லுக்கும் பொறுப்­பா­ன­தாக இருக்­கலாம். ஆயினும், ஆயுதப் போராட்­டத்தின் தலைமைத் தள­மாக வட­மா­கா­ணமே திகழ்ந்­தது. முப்­பது வருட கால­மாகத் தொடர்ந்த ஆயுதப் போராட்­டத்தை முடி­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான இறுதி யுத்­தமும் வட­மா­கா­ணத்­தி­லேயே நடந்து முடிந்­தது. இதனால் பாரிய அழி­வு­களும், ஈடு செய்­யவே முடி­யாத மனித பேர­வ­லங்­களும் அங்­கேயே நிகழ்ந்­தன. அத்­துடன் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் மற்றும் உள­வியல் ரீதி­யான பேரி­ழப்­புக்கள் என்­ப­னவும் அங்­கேயே ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.

எனவே, இத்­த­கைய இழப்­புக்­களை ஈடு செய்­வ­திலும், பாதிக்­கப்­பட்ட மக்­களை சமூக, பொரு­ளா­தார, அர­சியல் உட்­பட பல்­வேறு வழி­களில் வழி­ந­டத்திச் செல்ல வேண்­டிய பொறுப்பும் வட­மா­காண அர­சையே சார்ந்­திருக்கின்­றது. அர­சியல் நிர்­வாகச் செயற்­பா­டு­களில் எத்­த­னையோ குறை­பா­டுகள் இருக்­கத்தான் செய்­தன. அத்­த­கைய குறை­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் சிறப்­பா­ன­தொரு நிர்­வா­கத்தைக் கொண்டு நடத்­தி­யி­ருக்க வேண்டும். அதுவே பாதிக்­கப்­பட்ட மக்­களின் ஏகோ­பித்த எதிர்பார்ப்­பாக இருந்­தது. இன்னும் இருக்­கின்­றது.

புதிய பொறுப்­புக்­களில் புத்­தூக்­கத்­து­டனும், அர­சியல் சார்ந்த ஆர்­வத்­து­டனும் வட­மா­காண சபையின் உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் செயற்­பட்­டி­ருக்­கலாம். அத­ற்­கான நடை­மு­றைகள் குறித்து சரி­யான முறையில் அறி­யாத நிலையில் தமக்குத் தெரிந்த வழி­மு­றை­களின் மூலம் அவர்கள் தமது பொறுப்­புக்­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கலாம். ஆயினும் அவர்­க­ளுக்குரிய வழி­காட்­டல்­களை வழங்­கி­யி­ருக்க வேண்­டி­யது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னதும், அதன் தலை­மை­யி­னதும் பொறுப்­பாக இருந்­தும்­கூட, அதனை அவர்கள் சரி­யான முறையில் செய்யத் தவ­றி­யி­ருக்­கின்­றார்கள் என்றே கூற வேண்டும்.

மாகாண அமைச்­சுக்­களின் செயற்­பா­டு­களில் ஊழல்­களும், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்­களும் ஏற்­பட்­டி­ருந்­த­தாக ஆளும் கட்­சியைச் சேர்ந்த உறுப்­பி­னர்­களே முறை­யிட்­டி­ருந்­தார்கள். இது­வும்­கூட, மாகாண சபையின் சேவைகள் முழு­மை­யா­கவும் நல்ல முறை­யிலும் மக்­க­ளுக்குச் சென்­ற­டைய வேண்டும் என்ற ஆர்­வத்தின் மேலீட்டால் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­யாக இருந்­தி­ருக்­கலாம்.

ஆனால் அந்த முறைப்­பா­டுகள் அர­சியல் சார்ந்­த­தாக, அர­சியல் நன்­மை­களை சார்ந்­த­தாக பரி­ணாமம் பெற்­றி­ருப்­பதே வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­க­ளுக்குக் கார­ண­மாகும். அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராகச் செய்­யப்­பட்ட முறைப்­பா­டுகள் குறித்து விசா­ரணை செய்­வதும், அதன் அடிப்­ப­டையில் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­துவும் தவிர்க்­கப்­பட முடி­யாத செயற்­பா­டு­க­ளாகும். அது அந்த சபையின் வெளிப்­ப­டைத்­தன்மை, நேர்மை மற்றும் இத­ய­சுத்தி சார்ந்த சேவை என்­ப­வற்­றுடன் நேர­டி­யாக தொடர்­பு­டைய விட­ய­மாகும்.

பர­ப­ரப்­பான சூழல்

ஆரம்­பத்திலிருந்தே வட­மா­காண சபையின் செயற்­பா­டு­களில் ஒதுங்­கி­யி­ருக்­கின்ற ஒரு போக்கைக் கடைப்­பி­டித்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மை­யா­னது, வட­மா­காண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராகச் செய்­யப்­பட்ட ஊழல் நட­வ­டிக்­கைகள் தொடர்­பான முறைப்­பா­டுகள் விட­யத்­திலும் ஒதுங்­கி­யி­ருக்­கின்ற நடை­மு­றை­யையே பின்­பற்­றி­யி­ருந்­தது.

ஆனால் அமைச்­சர்கள் நான்கு பேருக்கும் எதி­ராகச் செய்­யப்­பட்ட முறைப்­பா­டுகள் குறித்து நடத்­தப்­பட்ட விசா­ரணை அறிக்­கை­யா­னது ஊட­கங்­களில் கசிந்து, அந்த முறைப்­பா­டு­களைக் கையாள்­கின்ற நடை­மு­றை­களில் சிக்­கல்­களை உரு­வா­க்கி­ய­தை­ய­டுத்து தமி­ழ­ர­சுக்­கட்சி முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக எடுத்­தி­ருந்த நிலைப்­பாடே சிக்­கல்­களை மேலும் சிக்­கல்கள் நிறைந்­த­தாக மாற்­றி­யி­ருக்­கின்­றது.

அமைச்­சர்கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் 23 இலட்சம் ரூபா செலவில் நடத்­தப்­பட்ட விசா­ர­ணைகள் பற்­றிய விசா­ரணைக் குழுவின் பரிந்­து­ரைக்கு அமை­வாக நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு முத­ல­மைச்சர் நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருந்தார். ஆயினும் விசா­ரணைக் குழுவின் அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த பரிந்­து­ரை­களும், அது தொடர்பில் முத­ல­மைச்சர் எடுத்த நட­வ­டிக்­கை­களும் விவாதப் பொரு­ளா­கின. மக்கள் மத்­தியில் கொண்டு செல்­லப்­பட்டு சமூக வலைத்­த­ளங்­களில் அவை மிகவும் முக்­கிய பேசு­பொ­ரு­ளாக மாற்றம் பெற்­றன.

இத்­த­கைய ஒரு நிலை­யில்தான், சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­ப­டாத அமைச்­சர்­க­ளான டாக்டர் ப.சத்­தி­ய­லிங்கம், பா.டெனீஸ்­வரன் ஆகி­யோ­ருக்கு எதி­ராக விசா­ர­ணைகள் நடத்­தப்­படும் என்றும், அந்த விசா­ர­ணைகள் முடியும் வரையில் குறிப்­பிட்ட காலப்­ப­கு­தியில் அவர்கள் அமைச்சு பொறுப்­புக்­களில் இருந்து விலகி, விடு­மு­றையில் செல்ல வேண்டும் என முத­ல­மைச்சர் அறி­வித்­த­தை­ய­டுத்து, அவ­ருக்கு எதி­ராக தமி­ழ­ரசுக் கட்சி போர்க்­கொடி உயர்த்­தி­யது.

அந்த அமைச்­சர்கள் இரு­வ­ருக்கும் எதி­ராக அத்­த­கைய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டக்­கூ­டாது என சுட்­டிக்­காட்­டிய தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, முத­ல­மைச்சர் அவ்­வாறு செயற்­பட்டால், அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று மிரட்­டி­யி­ருந்தார். ஆயினும் அத­னையும் பொருட்­ப­டுத்­தாத வகை­யி­லேயே முத­ல­மைச்சர் தனது முடி­வு­களை வெளி­யிட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து, கட்சி நலன்கள் சார்ந்து தமி­ழ­ர­சுக்­கட்சி முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்கையில்­லாப் பிரே­ரணை அடங்­கிய கடி­தத்தை தமி­ழ­ரசுக் கட்­சியின் மாகாண சபை உறுப்­பி­னர்கள் ஒன்­றி­ணைந்து, எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளையும் கூட்டிச் சென்று ஆளுநர் ரெஜினோல்ட் குரே­யிடம் கைய­ளித்­த­தை­ய­டுத்து, தேனீக்­களின் கூட்டைக் கலைத்­தது போன்று பர­ப­ரப்­பா­னதோர் அர­சியல் நிலைமை உரு­வா­கி­யது.

முத­ல­மைச்­சரின் கொடும்­பாவி எரிக்­கப்­படும் என்று தமி­ழ­ரசுக் கட்­சியின் சார்பில் கருத்து வெளி­யி­டப்­பட்­டது. அதே­வேளை, முத­ல­மைச்சர் தொடர்பில் தமி­ழ­ரசுக் கட்சி எடுத்­துள்ள நிலைப்­பாட்டைக் கண்­டிக்கும் வகையில், தமி­ழ­ரசுக் கட்­சிக்கு எதி­ராக சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டன. கறுப்புக்கொடி கட்­டிய நிகழ்வும் ஆர்ப்பாட்டங்களும் ஹர்த்தாலும் நடந்­தே­றி­ன.

அடுத்­தது என்ன?

முத­லமைச்சருக்கு ஆத­ர­வாக சமூக வலைத்­த­ளங்­களில் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்­டன. ஆத­ரவு திரட்­டப்­பட்­டது. அதே­போன்று பொது அமைப்­புக்­களும், தமிழ் மக்கள் பேர­வையும் ஒன்று கூடி முத­ல­மைச்­சரைப் பாது­காப்­ப­தற்­காக அவரை ஆத­ரித்து குரல் எழுப்­பி­யி­ருந்­தன. முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வா­கவும், தமி­ழ­ரசுக் கட்­சியின் செயற்­பாட்டைக் கண்­டித்தும் அடை­யாள கடை­ய­டைப்பு மேற்­கொள்­ளு­மாறு தமிழ் மக்கள் பேரவை பகி­ரங்க அறி­விப்­பையும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது.

வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிகள் இவ்­வாறு முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வான ஒரு நிலைப்­பா­டா­கவும், தமி­ழ­ரசுக் கட்­சிக்கு எதி­ரான ஒரு நிலைப்­பா­டா­கவும், தமிழ் அர­சி­யலில் இரண்டு நிலை­மைகள் கூர்­மை­ய­டைந்­துள்­ளன. இது தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மைக்கு ஏற்­பட்­டுள்ள பாரிய சவா­லாகும். இது கால வரையிலும் ஏற்­பட்­டி­ராத ஒரு தீவி­ர­மான அர­சியல் நிலைப்­பாடும் ஆகும். இது­கால வரை­யிலும், தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செயற்­பா­டு­களை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யா­கிய ஈ.பி­.ஆர்.­எல்.எவ். கட்­சியும் கூட்­ட­மைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியும் பகி­ரங்­க­மாக விமர்­சனம் செய்து வந்­தன.

அத்­துடன் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் செயற்­பா­டு­களைக் கண்­டித்தும் இருந்­தன. அதே­நேரம், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளான ஒரு பகு­தி­யி­னரும், இரா­ணு­வத்தின் ஆக்­கி­ர­மிப்பில் உள்ள காணி­களை விடு­விப்­ப­தற்­காகப் போராடி வரு­கின்­ற­வர்­களில் ஒரு பகு­தி­யி­னரும், தமி­ழ­ரசுக் கட்­சிக்கும், அதே நேரத்தில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­புக்கும் எதி­ராகக் குரல் எழுப்­பி­யி­ருந்­தனர். ஆனால் வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, முதலமைச்சருக்கு ஆதரவாகவும், அதேநேரத்தில் தமிழரசுக்கட்சிக்கு எதிராகவும் பொதுமக்கள் மத்தியில் இருந்து பெருமளவானவர்களை அணிதிரளச் செய்திருக்கின்றது.<

இது தமிழரசுக்கட்சி சார்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கு எதிரான ஒரு தீவிரமான அரசியல் நிலைப்பாட்டின் எழுச்சியாகவே நோக்கப்பட வேண்டும்.

இந்த வேளையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மாகாண அமைச்சர்கள் தொடர்பில் தெரிவித்துள்ள முடிவினையடுத்து ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது வேறு ஒரு கட்சிக்கு ஆதரவாக அவர் கருத்து வெளியிட்டிருந்த போதே அவரைத் தண்டிக்க வேண்டும் என, தான் கருத்து வெளியிட்டிருந்ததாகவும், எனினும் இம்முறை தமிழ் மக்களின் நலன்களுக்காகவே அவரைத் தண்டிக்காமல் தாங்கள் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவைக் கண்ணுற்ற முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மனம் நெகிழ்ந்து, எப்போதும் தான் மக்கள் பக்கமே இருப்பதாக உறுதியளித்திருக்கின்றார். முதலமைச்சர் என்ற அரசியல் பதவியில் இருந்தாலும்கூட, சிந்தனையில் தான் ஓர் அரசியல்வாதியல்ல. ஆகவே, தனக்கு கட்சி முக்கியமல்ல. மக்களே முக்கியமானவர்கள் என அவர் கூறியிருக்கின்றார்.

எனினும் மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், மாகாண சபையின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றன. மாகாண சபையின் சிக்கல்கள் சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டாலும்கூட, மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு ஆதரவானவர்கள் என்றும், முதலமைச்சருக்கு எதிரானவர்கள் என்றும் இரு முனைப்பட்டவர்களாக, இரு கூராகத் தீவிரமாகப் பிரிந்திருக்கும் நிலையில் வடமாகாண சபை தொடர்ந்தும் பதவியில் எவ்வாறு நீடித்திருக்கப் போகின்றது என்பதும் முக்கிய வினாவாகியுள்ளது.

Leave a comment