டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரண்டு இரத்தப் பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டணக் குறைப்பு முன்னெடுக்கப்படும் என சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் ரூபா 750 – 800 கட்டணம் 250/= ரூபா வரையில் குறைப்பதற்கும், முழுஅளவிலான இரத்த பரீசோதணைக்காக (Full blood count) அறவிடப்படும் ரூபா 3000 – 4000 கட்டணம் ரூபா 1000/= ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தனியார் நிறுவனங்களின் சட்டத்தின் கீழ் இந்தக் கட்டணத்தை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.