தூர பிரதேச பொது மக்கள் போக்குவரத்து பஸ்களுக்கான சட்டத்தைக் கடுமையாக்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தூர இடங்களுக்குப் பிரயாணத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ்கள் உரிய நிறுத்தல் இடங்களில் அல்லாமல் நிறுத்தினால் குறித்த பஸ்களின் போக்குவரத்து அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நடவடிக்கை ஜூலை 01 ஆம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.