வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள் இரண்டு வௌவேறு விதமான முடிவுகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.
13வது அரசியல் சீர்த்திருத்ததிற்கு அமைய 9 மாகாணங்களுக்கும் ஒரே சட்டமே அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குறித்த இரண்டு மாகாணங்களினதும் ஆளுநர்களும் இரண்டு விதமான சட்டத்தை கையாண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர்களுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களின் போது எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கையை தற்போது வடக்கு ஆளுநர் மேற்கொண்டுள்ளதாகவும், பெஷில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.