முதலமைச்சரின் கோரிக்கைகள் மீளப்பெறப்படுமாயின் வட. மாகாணத்தில் எழுந்துள்ள பிரச்சினை சுமூகமான முறையில் தீர்க்கப்படும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்; “நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அரசியல் சாசன ஒழுங்கு விதிகளை மீறி முதலமைச்சர் செயற்படுவது பொருத்தமற்றது.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாதவர்களிடத்தில் உத்தரவாதத்தை எழுத்து மூலம் கேட்பதும் நியாயமற்ற கோரிக்கை. ஆகவே அவ்விதமான கோரிக்கைகளை முதலமைச்சர் மீளப்பெற்றுக்கொள்வராயின் இப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக் கொள்ள முடியும். அவ்வாறான முடிவொன்றுக்கு முதலமைச்சர் வராத பட்சத்தில் நிலைமைகள் வேறுவடிவத்திற்கு செல்லக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.