லலித்வீரதுங்கவின் கடவுச்சீட்டுக்கு 100 லட்சம் ரூபா

336 0

18179474771585537822l2தற்சமயம் நீதிமன்ற விசாரணையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்கவின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டை 100 லட்சம் ரூபா பிணை முறியின் கீழ் தற்காலிகமாக விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமது கட்சிக்காரர் இந்தியாவிற்கு சுற்றுலா செல்லவிருப்பதன் காரணமாக, கடவுச்சீட்டை விடுவிக்குமாறு லலித்வீரத்துங்கவின் சட்டத்தரணி நீதிமன்றில் முன்வைத்த வேண்டு கோளுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி என்.வீ. கருணாதிலக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை லலித்வீரத்துங்கவின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.